ஓசூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் இருவர் கைது
ஓசூரில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
ஓசூர் பேருந்து நிலையத்தில் போலீசார் சந்தேகப்படும் நபர்களை விசாரணை மேற்கொண்டு இருந்த போது, இருவர் கோணிப்பை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பெயர் சாமுல் நாயக் 34 , சன்சித் சின் சான் 34 எனவும் ஒரிசாவில் இருந்து வந்ததாக தெரிவித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்ட போது சிறிய அளவில் 9 பண்டல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் ரூ3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதில் தொடர்புடைய வாங்கி விற்பனையில் ஈடுபடும் முக்கிய நபரை தேடி வருகின்றனர்