ஆக்கிரமிப்பு அட்டகாசம்: நீர் சூழாமல் இருக்க ஏரிக்கரையை உடைத்த நபர்கள்

ஏரிக்கு அருகில் கட்டப்பட்ட வீடுகள், ஏரி நீர் சூழாமல் இருக்க கரையை உடைத்த 4 பேரிடம் போலிசார் விசாரணை

Update: 2021-12-02 07:31 GMT

ஒசூர் அருகே ஏரிக்கு அருகில் கட்டப்பட்ட வீடுகள், ஏரி நீர் சூழாமல் இருக்க கரையை உடைத்த 4 பேரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சோமநாதபுரம் கிராமத்தின் பின்புறமாக உள்ள ஏரி 6 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. அந்த ஏரியில் உள்ள பட்டா நிலத்தில் மகாராஜா என்னும் லே அவுட்டில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து பெய்த மழையால் ஏரி நீர் நிரம்பி காட்சியளிக்கும் நிலையில், குடியிருப்புகளின் சுற்றுச்சுவர் வரை நிரம்பி இருக்கும் ஏரி நீரை வெளியேற்ற குடியிருப்பு வாசிகள் 4 பேர் கடப்பாறையால் ஏரிக்கரையை உடைத்ததில் நீர் கால்வாயில் வெளியேறி வீணானது. ஏரிக்கரையை உடைத்த 4 பேரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து ஒசூர் நகர போலிசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவா(31), வினோத்(38), சிவக்குமார்(42), சின்னசாமி(61) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல மணிநேரங்களாக நீர் வீணான நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் மணல் மூட்டைகளை கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டது.  மேலும் சம்பவயிடத்தில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்.

Tags:    

Similar News