ஒப்பதவாடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பதவாடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கான தொழிற்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2021-07-23 10:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பதவாடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சார்பில் நடந்த விவசாயிகளுக்கான தொழிற்நுட்ப பயிற்சி.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒப்பதவாடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சார்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும், செலவில்லா பண்ணைய முறை குறித்தும், பண்ணையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டி, கரைசல், ஜீவாமிருதம் மற்றும் பஞ்சகாவியா தயாரிக்கும் முறைகள் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் பூச்சிபொறி குறித்தும் விளக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் ஒப்பதவாடி, கணமூர், அங்கிநாயனப்பள்ளி, குண்டியால்நத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த பயிற்சியில், விதை சான்று மற்றும் அங்கக வேளாண்மை உதவி இயக்குநர் அருணன், பர்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், வேளாண்மை அலுவலர் சக்திவேல், விதைச்சான்று வேளாண்மை அலுவலர் ரூபசந்திரன், ஒப்பதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் ஒப்பதவாடி உழவர் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News