பர்கூரில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.;

Update: 2021-06-06 05:15 GMT

கிருஷ்ணகிா மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் கண்ணு தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுந்தரேசன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட நகலை எரித்த விவசாயிகள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகேசன், சக்கரவர்த்தி, சென்னையன், திருப்பதி உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். மாதையன் நன்றி கூறினார். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பர்கூர், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.

Tags:    

Similar News