ஊஞ்சல் ஆடும் போது கயிறு இறுக்கியத்தில் 13 வயது சிறுவன் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஊஞ்சல் ஆடும் போது கயிறு இறுக்கியத்தில் 13 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-06-24 05:15 GMT

பைல் படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அமராவதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கோவிந்தராஜ், அமராவதி ஆகிய இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டில் இருந்த இவர்களது குழந்தைகள் சிரஞ்சித், ஜோதி, யுவஸ்ரீ, புவனேஷ் ஆகியோர் அவருடைய கொட்டகையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் ஆடிய ஊஞ்சல் கயிறு சிரஞ்சித் கழுத்தை இறுக்கியது. இதை பார்த்த இவருடன் விளையாடிக்கொண்டிருந்த சகோதரர்கள், சகோதரிகள், கூச்சலிட்டனர். கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து சிரஞ்சித்தை மீட்டு, பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ரஞ்சித்தை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப் பதிவு செய்து சிறுவனின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News