அட்மா திட்டத்தின் கீழ் மண்புழு உர உற்பத்தி பயிற்சி
அட்மா திட்டத்தின் வாயிலாக தொகரப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் உற்பத்தி குறித்து ஒருநாள் பயிற்சி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வேளாண்மைத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் வாயிலாக தொகரப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் உற்பத்தி குறித்து ஒருநாள் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியினை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்து, வேளாண்மைத்துறையின் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கினார். மேலும் பர்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி உயிர்உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் ஆகியவற்றை பயன்படுத்தும் முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஆலோசகர் குணசேகர் மண்புழுஉர உற்பத்தி, அதன் பயன்கள் மற்றும் அதன் கட்டமைப்பு பராமரிப்பு குறித்த விளக்கங்களை அளித்தார். தொடர்ந்து பயிற்சி அளித்த உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் பன்னீர்செல்வம் அங்கக வேளாண்மை குறித்தும் அதன் சான்றுதன்மை குறித்தும் விளக்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் சக்திவேல் பண்ணை கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் வல்லரசு, வீரமணி, தனசேகர், திருமால் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.