திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2021-03-28 11:52 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக மதியழகன் போட்டியிடுகிறார். இவர் பிஆர்ஜி மாதேப்பள்ளி, அம்மேரி, காரகுப்பம், 9 பனைமரம், கொட்டிலேட்டி, கொல்லப்பள்ளி, இருளர் காலனி, குண்டியால்நத்தம், அங்கிநாயனப்பள்ளி, அண்ணாநகர், மல்லப்பாடி, தபால்மேடு, கோடியூர், சமததுவபுரம், சக்கில்நத்தம், தண்ணீர்பள்ளம், தீர்த்தகிரிபட்டி, கப்பல்வாடி, வெங்கடசமுத்திரம், ஜிஞ்சம்பட்டி கூட் ரோடு, பட்டலப்பள்ளி, பண்டசீமனூர், தொட்டிகொல்லப்பள்ளி வரை 49 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், பர்கூர் தொகுதியை இம்முறை திமுக வின் கோட்டையாக மாற்ற வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல திட்டங்களை உங்களுக்கு வழங்க உள்ளார். அந்த திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்தடைய நான் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். எனவே, பர்கூர் தொகுதியில் நீர்வளத்தைப் பெருக்க பாடுபடுவேன். எனவே அனைவரும் உதயசூரியன சின்னத்திற்கு வாக்களித்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த பிரசாரத்தின் போது, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிசெல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசன், சி.பி.ஐ. பொதுக்குழு உறுப்பினர் கண்ணு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News