பர்கூரில் 60 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை மையம் - தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு ஏற்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், 60 படுக்கைகள் வசதியுடன், கொரோனா சிகிச்சை மையம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-06-12 03:42 GMT

பர்கூரில் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், 60 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து கொடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் சிகிச்சை பெறும் விதமாக, இன்று பர்கூர் பொறியியல் கல்லூரியில் கூடுதலாக 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டது.

இந்த சிகிச்சை மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் மற்றும் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து,  தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் 1000 முகக்கவசம், கையுறை, மின்சார அடுப்பு, கொரோனா பரிசோதனை மையம், நாற்காலி உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ரபி நேருவின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 10,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கினர்.

Tags:    

Similar News