பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் இணையவழி மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்க அழைப்பு
பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு சேர்க்கை விண்ணபங்கள் இணைய வழியாக பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவியர் சேர்க்கைக்கு விண்ணபங்களை இணையதளம் முலம் பதிவு செய்யலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-22ம் கல்வியாண்டில் பயிற்றுவிக்கப்படும் பி.ஏ., (தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு), பி.எஸ்சி., (கணினி அறிவியல் (சுழற்சி 1 மற்றும் 2), மின்னணுவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுகட்டுப்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல்), பி.சி.ஏ., கணினி பயன்பாட்டியல் (சுழற்சி 1 மற்றும் 2), பி.காம்., பி.காம், கூட்டாண்மை செயலறியல், பி.காம்., கணக்கு பதிவியல் மற்றும் நிதி ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்களை இணையதள முகவரியில் வருகிற 10ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் 044-2260098 மற்றும் 044-28271911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகியும் கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.