பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
பர்கூர் அருகே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி,. சாய்சரண் தேஜஸ்வி அவர்கள் உத்தரவின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் செந்தாரப்பள்ளி கிராமத்தில் உள்ள பெண்களுக்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி இன்று விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பது குறித்து, பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணை கொடுமைகள், பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண்கள் 181 மற்றும் 1098 தொடர்பு கொண்டு புகாரினை தெரியப்படுத்தலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.