வாட்ச்மேனிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 வாலிபர்கள் கைது

பர்கூரில், டெக்ஸ்டைல்ஸ் மார்கெட் வாட்ச்மேனிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-24 02:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்,  பிஎஸ்டி டெக்ஸ்டைல்ஸ் மார்கெட்டின் வாட்ச்மேனாக இருப்பவர் லட்சுமணன். இவர் நேற்று மதியம் சொந்த வேலையாக பர்கூரில் இருந்து காரகுப்பம் நோக்கி,  டூவீலரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது,  அங்குள்ள மேம்பாலத்தின் அருகில் இவரை 3 வாலிபர்கள் வழிமறித்து, பாக்கெட்டில் உள்ள பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த லட்சுமணன், தனது பாக்கெட்டில் இருந்த ரூ. 2 ஆயிரத்தை எடுத்து கொடுத்துள்ளார்.

இதனிடையே, லட்சுமணனை மிரட்டுவதை பார்த்த அந்த பகுதிக்கு வந்த சிலர், அந்த மூன்று வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் எஸ்.ஐ சங்கர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.

இதில், அவர்கள் மூவரும் பணம் கேட்டு மிரட்டியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் கிருஷ்ணகிரி தண்டேகுப்பம் விக்னேஷ், கெட்டூர் பொன்குமார், பாறையூர் லோகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News