கந்திகுப்பம் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்
சென்னைப் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது அந்த பேருந்து இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகே வந்த போது நிலைதடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஜான்முகமது, நந்தன், வேலு, ரங்கராஜ் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர் படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் எஸ்.ஐ.ஆஞ்சநேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்