குளித்தலையில் ஒரேநாளில் 14 பேருக்கு விதவைச்சான்று வழங்கல்

குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி, மூன்று ஒன்றியங்களில் விதவைச்சான்று வழங்கினார்.

Update: 2021-12-02 23:45 GMT

ஒரே நாளில் 14 பேருக்கு விதவை சான்று வழங்கிய கோட்டாட்சியர் புஷ்பா தேவி.

கரூர் மாவட்டம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் உள்ள பல்வேறு சூழ்நிலைகளால் கணவரை இழந்த ஏழை பெண்கள்,  ஆதரவற்ற விதவைச்சான்று வேண்டி, குளித்தலை கோட்டாட்சியருக்கு விண்ணப்பம் செய்திருத்தனர்.

கோட்டாட்சியர் புஷ்பா தேவி, ஒவ்வொருவரின் இல்லங்களுக்குச் சென்று, அந்த பெண்களின் நிலை குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டு,  ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில்,   14 ஆதரவற்ற பெண்களுக்கு,  ஆதரவற்ற விதவைச்சான்று வழங்கினார். தொடர்ந்து ஆதரவற்ற விதவைச்சான்று குறித்த முக்கியத்துவத்தை விளக்கமாகக்கூறி, சான்றை என்ன முறையில் பயன்படுத்தலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்,

கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏழை, எளிய ஆதரவற்ற கணவரை இழந்த பெண்கள்,  விண்ணப்பித்து அரசு சலுகைகளை பெற முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரேநாளில் 14 பேருக்கு  சான்றிதழ் வழங்கியது இதுவே முதல் முறையாகும். சான்று பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News