தொடர் மழை : குளங்கள் நிரம்பி காட்டு வாரி உடைந்ததால், குடியிருப்புகளில் வெள்ளம்
குளித்தலை அருகே நங்க வாரத்தில் காட்டுவாரி உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன;
குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 70 மில்லி மீட்டர் கனமழை பெய்ததில் அப்பகுதிகளில் உள்ள குளம் மற்றும் விவசாய நெல்வயல்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் நிரம்பி ஓடியது,
நங்கவரம் பகுதியில் செல்லும் காட்டு வாரி கரை உடைத்துக்கொண்டு அவ்வழியாக செல்லும் சாலைகள், விவசாய நெல் வயல்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, வாகன ஓட்டிகள் மற்றும் பலர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி சாலையை கடந்து செல்கின்றனர். அருகே உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்து குளம்போல் நிற்கிறது
தோகைமலை மானாவாரி பகுதிகளில் பெய்த கனமழையில் அப்பகுதிகளில் உள்ள 6க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மழைநீர் வழிகிறது, இதனால் அப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நெல் வயல்கள் நீரில் மூழ்கின.
இதனை தொடர்ந்து குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், அப்பொழுது விவசாயிகள் நீரில் மூழ்கிய நெல் வயல்களுக்கு இழப்பீடு பெற்று தர கோரிக்கை வைத்தனர். மானாவாரி பகுதிகளில் பெய்த மழை மிகவும் பயனுள்ள வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினர்