தெற்கு பள்ளம் பகுதி பெட்டிக் கடையில் மது விற்பனை: ஒருவர் கைது
தெற்கு பள்ளம் பகுதி பெட்டிக் கடையில் மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் தோகைமலை தெற்குபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முத்து (55). இவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனை செய்த முத்து என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.