அய்யர்மலையில் கார்த்திகை தீபம்: பக்தர்கள் பரவசம்
குளித்தலை அய்யர் மலையில் 1,117 அடி உயரமுள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.;
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாணிக்கமலையான் என்கின்ற ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் மிகப்பெரிய தெப்பக்குளத்துடன் உள்ளது. இந்த கோவிலின் மலை 1,117 அடி உயரம் கொண்ட செங்குத்தான 1,017 படிகளுடன் அய்யர்மலை உச்சியில் கோவில் உள்ளது.
வருடந்தோறும் கார்த்திகை மாதம் தீபத் திருநாளை முன்னிட்டு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும், தொடர்ந்து 150 மீட்டர் நீளமுள்ள துணியாலான நாடா திரி வைத்து 5 கேன் நெய் மற்றும் 16 கேன் தீப எண்ணை ஊற்றி சுமார் 5 அடி உயரமுள்ள டிரம்மில் வைத்து மலையின் உச்சியில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தி, திரியில் குருக்கள் மகா தீபத்தை ஏற்றினார். பக்தர்கள் அனைவரும் முழக்கங்கள் எழுப்பி இறைவனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.