பஞ்சப்பட்டி ஏரியில் பட்டுப்போன மரங்கள் ஏலம்
குளித்தலை அருகே பஞ்சப்பட்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பட்டுபோன 134 மரங்கள் இன்று ஏலம் விடப்பட்டன.;
தமிழகத்திலேயே மிகப்பெரிய மூன்றாவது ஏரியான பஞ்சப்பட்டி ஏரிக்கரையில் வறட்சி காரணத்தால் பல மரங்கள் பட்டுபோயின. இந்த மரங்கள் அரசு விதிமுறைகள்படி இன்று ஏலம் விடப்பட்டன. குளித்தலையில் அரியாறு வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் தயாளகுமார் முன்னிலையில், பட்டுப்போன 124 வேம்பு மரங்கள், 7 வேல மரங்கள் மற்றும் ஏரிக்கரையின் வெளிப்புறத்தில் உள்ள 3 பனை மரங்களை வேருடன் அகற்றிட ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் 42 நபர்கள் பங்கேற்றனர். அரசின் ஆரம்ப ஏல விலையாக 29 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூ 3 லட்சத்து 94 ஆயிரத்திற்கு கமலநாதன் என்பவர் ஏலம் எடுத்தார். ஏலம் எடுத்தவர்கள் அரசு விதிமுறைகள் படி மரங்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.