கரூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவனின் சகோதரி இந்திராணியின் கரூர் வீட்டில் சோதனை நடைபெற்றது.

Update: 2021-10-22 08:30 GMT

கரூரில் இந்திராணியின் வீட்டில் சோதனை நடத்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார்.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவராக இருப்பவர் இளங்கோவன்.இவர் சேலத்தின் முக்கிய பகுதியில் மாளிகை போல் பிரமாண்டமாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இதற்கு ஆதாரம் என்ன என்று கேள்வி எழுந்தது. இதனையடுத்து சேலத்தில் உள்ள இவருடைய வீடு, உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில், இளங்கோவனின் சகோதரி இந்திராணி என்பவர் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள கள்ளபள்ளியில் வசித்து வருகிறார். இங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவனின் சகோதரி இந்திராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மீது வழக்கு பதிந்தனர். இதனடிப்படையில் இளங்கோவன் மற்றுப் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News