பன்னீர்செல்வம் என்பவர் புதுக்கோட்டையில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார். வேன் குளித்தலை மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் செல்லும் போது, பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் நிறுத்தி வாகன சோதனை செய்தனர்.
அப்போது பன்னீர்செல்வத்திடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ 97,500 எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். மேற்படி தொகை பாதுகாப்பிற்காக சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப் பட்டது.