தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குழு உறுப்பினராக குளித்தலை எம்எல்ஏ நியமனம்

Update: 2021-07-02 18:37 GMT

தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குழு உறுப்பினராக குளித்தலை எம்எல்ஏ- ஆர். மாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குழுவில் உறுப்பினர்களாக 18 எம்எல்ஏ-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி எம்எல்ஏ மாணிக்கமும் இடம் பெற்றுள்ளார் . இந்தக் குழுவுக்கு தலைவராக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்றார்.

அவைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குளித்தலை எம்எல்ஏ- மாணிக்கத்துக்கு கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். 2021-2022 ஓராண்டுக்கு அவைக்குழு உறுப்பினராக மாணிக்கம் உள்ளிட்ட 18 எம்எல்ஏ -க்கள் செயல்படுவார்கள்.

Tags:    

Similar News