கரூர் மாவட்டம் முழுவதும் பரவலான மழை : விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை .பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
கரூர் மாவட்டம் கடவூரில் கொட்டும் மழை.
கரூர்:
கரூரில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது. இருப்பினும் பகல் நேரத்தில் வெப்பம் மிகுதியாகவே இருந்தது. மாலை 5 மணி அளவில் லேசாக காற்று வீசத்தொடங்கியது. மழை கலைந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், பலத்த காற்று வீசத்தொடங்கியது.
அப்போது இடியுடன் மின்னலும் வீசியது. திடீரென 'சடசட' வென மழை கொட்டத் தொடங்கியதும், அதன் வேகத்திற்கு இணையாக காற்றும் வீசியது. ஆனால், காற்றுடன் மழையும் விடாமல் பெய்யத்தொடங்கியது.சுமார் ௧ மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக மாறியது.
கரூர் மாவட்டத்தில் கடவூர், காணியாளம்பட்டி, குளித்தலை, கரூர்,தோகைமலை,மணப்பாறை பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. எதிர்பாராமல் பெய்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.