அரசு கல்லூரி பயனுள்ள இடத்தில் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு

கடவூரில் அரசு கலைக் கல்லூரிக்கு மக்கள் விரும்பும் இடத்தில் கட்டடம் கட்ட வலியுறுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-11-16 16:45 GMT

கடவூரில் அரசு கல்லூரி மக்களுக்கு பயனுள்ள இடத்தில் கட்ட வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டியில் கடந்த 20 ஆண்டு கோரிக்கையை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட அனுமதி அளித்து அங்குள்ள கடவூர் பழைய யூனியன் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது, கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுகிறோம் என்ற பெயரில், தரகம்பட்டி பகுதியில் அரசு மற்றும் கோயில் நிலம் இருந்தும் அங்க புதிய கட்டடங்கள் கட்டாமல், தரகம்பட்டியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் ஆளுங்கட்சியின் பிரமுகர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் ரியல் எஸ்டேட் 150 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் உள்ள பகுதிக்கு புதிதாக கல்லூரி கட்டடம் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவ, மாணவிகள் நலன் கருதி தரகம்பட்டியிலேயே அரசு கல்லூரி அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து அனைத்துக் கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டும், தரகம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று கூறி கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர்.


Tags:    

Similar News