முருகன் வேல் எங்கே..? புறப்பாட்டை மறித்த சிவனடியார்கள்

கரூரில் ஆருத்ரா தரிசன விழாவில் வேல் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் முருகன் புறப்பாடு நடந்ததால் சிவனடியார்கள் எதிர்ப்பு.;

Update: 2021-12-20 12:30 GMT

வேல் இல்லாததால்,  சுவாமி புறப்பாட்டு எதிர்ப்பு தெரிவித்த சிவனடியார்கள்.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்திற்கு முன்பாக விநாயகர், சிவகாமி அம்பாள், நடராஜர் மற்றும் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு மாட வீதி வழியாக புறப்பாடு நடைபெறுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, முருகன் கையில் இருக்க வேண்டிய வேல் இல்லாததால் சிவனடியார்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தையும், சிவாச்சாரியார்களையும் எதிர்த்து அர்த்தஜாம பூஜையில் ஈடுபடக்கூடிய சிவனடியார்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சுவாமிகள் வாகனத்தின் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கோவில் பிரகாரத்தை சுற்றி உள்ள பரிவார மூர்த்திகளுக்கு முறையாக எந்தவித பூஜைகளும் நடைபெறவில்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சிவனடியார்கள் போராட்டத்திற்கு பிறகு முருகப் பெருமானுக்கு கோவில் நிர்வாகத்தினர் வெள்ளி வேல் எடுத்து வந்து சாத்தினர். இதையடுத்து சிவனடியார்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது.

Tags:    

Similar News