கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.;
நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்
கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, வாங்கல் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில், நேற்றிரவு திடீரென தீ பற்றியுள்ளது. அவ்வப்போது குப்பை கிடங்கில் ஏதாவது ஒரு மூலையில் லேசாக தீப்பற்றிக் கொள்ளும் என நினைத்து, குப்பை கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் கவனக் குறைவாக இருந்தனர்.
ஆனால், தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்த்து. இதையடுத்து, குப்பைக் கிடங்கு ஊழியர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை போராடினர். 3 தீயணைப்பு வண்டிகள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.