இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்

இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணியில் லிங்கத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் செவிலியர் இருவரும் சென்று தடுப்பூசி செலுத்தினர்.

Update: 2021-10-30 09:15 GMT

வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்திய லிங்கத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் மற்றும் செவிலியர் சினேகா.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் லிங்கத்தூர் துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாமை கரூர் மாவட்ட துணை ஆட்சியர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்) பார்வையிட்டு இயலாதவர்கள், வயது முதியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து மரகதம் நாச்சிமுத்துக்கு இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணியில் லிங்கத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் மற்றும் செவிலியர் சினேகா இருவரும் சென்று தடுப்பூசி செலுத்தி வந்தனர்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் முகாமில் ஆசிரியர் ஜெயப்பிரியா, பணியாளர்கள் சிவகுமார், மல்லிகா, வசந்தா, சத்யா, வாசுகி, கௌசல்யா பணியாற்றினர். முகாமினை கரூர் மாவட்ட துணை ஆட்சியர் (ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலன்) சுகாதாரத்துறை துணை இயக்குநர், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாமினை உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் கலையரசி சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

Tags:    

Similar News