17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி மாணவிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;
கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் (17 ) மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். அந்த மாணவிக்கும் திருப்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும், அந்த மாணவியை குமார் திருமணம் செய்வதாக கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் மாணவி வசித்து வரும் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் வேலை பார்க்கும் மாரிமுத்து (வயது 35) என்பவருக்கு தெரியா வந்துள்ளது. எனவே மாரிமுத்து இந்த தகவலை வெளியே சொல்லி அம்பலப்படுத்துவேன் எனவும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி மாணவிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவி தற்போது 8 மாத கர்ப்பணியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த மாணவி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த வழக்கில் மெக்கானிக் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாகி விட்ட குமாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.