இளம்பெண் 17 முறை கத்தியால் குத்தி கொலை - வெறி பிடித்த இளைஞர் கைது

இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்தி படு கொலை செய்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2021-09-01 13:45 GMT

இளம் பெண்ணை 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்த வெறியன்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோரம் அமைந்துள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் சூரிய காயத்ரி(20).

இவர் தனது வீட்டு சமையல் அறையில் நேற்று வழக்கம்போல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆரியநாடு பகுதியை சேர்ந்த அருண்(28) என்ற இளைஞர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி உள்ளார்.

சூரிய காயத்ரி மீது 17 முறை கத்தி குத்து விழுந்ததில் கழுத்து, வயிறு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டு நிலை குலைந்து அவர் சாய்ந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தாயார் வத்ஸலா மகளை காப்பாற்ற முயன்றபோது அவரையும் அருண் தாக்கியதில் காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே சூரிய காயத்ரியின் தந்தை சிவதாசனையும் அருண் தாக்கியுள்ளார், தொடர்ந்து சிவதாசன் தன் மகளுக்கு ஏற்பட்ட துயரத்தை கண்டு அதிர்ச்சியடைந்து அலறவே, அண்டை வீட்டினர் அங்கு ஓடி வந்தனர்.

இருவரையும் அப்பகுதியினர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று காலை சூரிய காயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருவரையும் கத்தியால் குத்திய அருண் தப்பியோடி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மறைந்திருந்தார், சம்பவம் அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் தோட்டத்தில் தேடி தலைமறைவாக இருந்த அருணை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சூரிய காயத்ரியும் அருணும் ஏற்கனவே நெருங்கி பழகி வந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்ததாகவும்,

அதன் பின்னர் அருண் தொடர்ந்து சூரிய காயத்ரிக்கு அருண் தொல்லை அளித்து வந்த நிலையில், அருன் மீது பலமுறை போலீசில் புகார் அளித்து இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

சூரிய காயத்ரி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து கடந்த ஆறு மாதங்களாக தாயாருடன் வசித்து வருகிறார், அருணும் ஏற்கனவே திருமணமாகி தன் குடும்பத்தினரோடு வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News