திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
தொடர்மழை காரணமாக குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது, இதன் காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து அதன் காரணம் உபரி நீர் திறக்கப்பட்டு திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் குமரி மலையோர பகுதிகளில் பெய்த மழை காரணமாக மலைகளில் இருந்து நீர்வரத்து தொடர்ந்து வருவதால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தற்போது நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழை இல்லை என்றாலும் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு வேலிகளை மூழ்கடிக்கும் அளவிற்கு ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ள நீரால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிட தக்கது.