குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - வியாபாரிகள் மகிழ்ச்சி
குமரியின் குற்றாலமான திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
மகாசிவராத்திரி விழாவானது கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகுவிமர்சையாக பாரம்பரிய முறையிலும் கொண்டாடப்படுவது வழக்கம். மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. இதனிடையே 12 சிவாலயங்களில் மூன்றாவது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோவிலில் நேற்று காலை முதலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். இன்று அதிகாலை வரை திற்பரப்பு மகாதேவர் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் பூஜைகளை முடித்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நீண்டகாலமாக திற்பரப்பு அருவி கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில் அதிகப்படியான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.