குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவி அடைப்பு: வியாபாரிகள் கவலை
அரசு உத்தரவுப்படி குமரியின் குற்றாலமான திற்பரப்பு அருவி அடைக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி கொரானா பரவலை தடுக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு 21 நாட்களுக்கு முன் திறக்கபட்டு சுற்றுலா பயணிகளை அனுமதித்தனர். இதனால் இந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ஒமிக்கிரான், கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும், வெளியேற்றப்பட்டு பேருராட்சி நிர்வாகம் சார்பில் அருவியின் நுழைவு வாயில், தடுப்பு வேலிகளால் மீண்டும் அடைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையின்றி வாழ்வாதாரம் பாதிப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.