அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-06-24 08:45 GMT

கன்னியாகுமாரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேர அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் அதிக மக்கள் தொகையை கொண்ட பேரூராட்சியாக கொல்லங்கோடு பேரூராட்சி உள்ளது.

இந்த பேரூராட்சியில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் அதிலும் பெரும்பான்மையாக மீனவ மக்களே உள்ளனர்.

இந்த பேரூராட்சியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசுக்கு மீனவ மக்களிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டு.

அதில் பாதி இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டபட்டு செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள இடங்கள் முழுவதும் புற்கள் மண்டி காடுபிடித்து கிடக்கிறது.

மேலும் இந்த நிலையத்தில் முழு நேர நிரந்தர பணியாட்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் அவசர தேவைகளான பிரசவம் மற்றும் விபத்து உள்ளிட்ட தேவைகளுக்கு மருத்துவமனைக்கு வருபவர்கள் உயிர் இழக்கும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

ஆகையால் அதிகப்படியான மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளுடன் கூடிய முழு நேர மருத்துவமனையாக மாற்றி நிரந்தர பணியாட்களை நியமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை கோரிக்கை மனுவாக தமிழக முதல்வருக்கும் அனுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News