3,500 அடி உயர காளிமலை கோவிலில் விமரிசையாக நடந்த பொங்கல் விழா

குமரியில் 3.500 அடி உயரத்தில் அமைந்துள்ள காளிமலை கோவிலில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

Update: 2022-04-16 14:00 GMT
காளிமலை கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் அமைந்துள்ள காளிமலை துர்காதேவி கோவில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று லட்சகணக்கான பெண்கள் சுமார் 3 - கிலோ மீட்டர் தூரம் நடந்து மலையேறி சென்று பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் நிகழ்ச்சி கோவில் நிர்வாகிகளுடன் சாதாரணமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா பல ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக மற்றும் கேரள பா.ஜ.க. தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துர்கா தேவியை தரிசித்து விட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சார்ந்த பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், காணி இன மக்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து துர்கா தேவிக்கு படையலிட்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News