குமரியை குளிர்வித்த தொடர் மழை, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரியை குளிர்வித்த தொடர் மழையால் அனைத்து அணைகளும் நிரம்பியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-09-12 14:00 GMT

குமரியில் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில் கேரளாவில் பருவமழை தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இந்த மழையின் காரணமாக குமரியில் நீடித்து வந்த வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

இதனிடையே மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் மழை தொடர்வதால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல் உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதோடு குடிநீர் பஞ்சமும் தீரும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News