பேருந்தை கடக்க முயன்ற வாலிபர்கள்; விபத்தில் சிக்கி பரிதாப பலி
குமரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற விபத்தில் அரசு பேருந்து சக்கரம் ஏறி இரு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி.;
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற அரசு பேருந்தை இரு சக்கர வாகனத்தில் வந்த காட்டாத்துறை பகுதியை சேர்ந்த ஷாஜி (18) மற்றும் பிரேம் குமார் (22) ஆகியோர் முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது சாலையை கடக்க காத்திருந்த களியக்காவிளை பகுதியை சேர்ந்த நசீர் (52) என்பவர் மீது இருசக்கரம் மோதி சாலையில் விழுந்தது, அந்த இருசக்கரத்தில் வந்த இரு வாலிபர்களும் கீழே விழுந்த நிலையில் அவர்களின் தலை மீது அரசு பேருந்து ஏறி இறங்கியது.
இதில் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த களியக்காவிளை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.