சுவாமி விவேகானந்தரின் 159 வது ஜெயந்தி விழா - குமரியில் கொண்டாட்டம்

சுவாமி விவேகானந்தரின் 159 வது ஜெயந்தி விழா குமரியில் கொண்டாடப்பட்டது.;

Update: 2022-01-12 13:30 GMT

குமரி மாவட்ட இந்து மகாசபா சார்பில் நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. 

சுவாமி விவேகானந்தரின் 159 ஆவது ஜெயந்தி விழா மற்றும் இளைஞர் திருவிழா,  நாடு முழுவதும் ஜனவரி 12 ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குமரி மாவட்ட இந்து மகாசபா சார்பில் நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து,   விவேகானந்தரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

நிகழ்ச்சியில் அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் தா. பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு,  சுவாமி விவேகானந்தரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதே போன்று கோட்டார் சந்திப்பில் குமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சுவாமி விவேகானந்தரின் படத்துக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார். 

Tags:    

Similar News