சாலையில் நடந்துசென்ற நபர் திடீர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
குமரியில், சாலையில் நடந்து சென்ற நபர் திடீரென உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து, காவல் நிலையம் செல்லும் சாலையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க, ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென சாலையில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அடிப்படையில் போலீசார் அவரை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார், இதுகுறித்து, ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.