வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை –கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா மையங்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை -குமரி ஆட்சியர் எச்சரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் சிலர் கொரோனா மையங்களில் மின்சார வசதியில்லை, வெண்டிலேட்டர் இல்லை என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை டோல் பிரீ எண் 1077 என்ற எண்ணில் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இதேபோல் யாருக்கேனும் உடல் நலம் சரியில்லா விட்டாலும் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும், கொரோனா மையங்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.