மத கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு, பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்கு

குமரியில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-07-23 13:30 GMT

மேடையில் பேசும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிருஸ்தவ இயக்கங்கள் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்துக்கள் குறித்தும் இந்து கோவில்கள் குறித்தும் கொச்சைப்படுத்தி பேசினார்.

மேலும் பாரத மாதா குறித்தும் பூமிதாய் குறித்தும் பாரத பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்டீபன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் கைது செய்யவும் வலியுறுத்தி இந்து இயக்கங்கள் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் அதிகரித்த நிலையில் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மதக் கலவரத்தை உருவாக்கும் விதமாக அருமனையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் ஸ்டீபன் ஆகியோர் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News