குமரியில் சிறப்பு கிராமசபை கூட்டம்: வெள்ள நிவாரணம் வழங்க கோரிக்கை

குமரியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மழை பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2021-12-18 14:45 GMT

வாவறை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மெற்றில்டா தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருந்தார், அதன் அடிப்படையில் வாவறை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மெற்றில்டா தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை எடுத்து கூறினர், மேலும் மழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை எனவும் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த இழப்பீடும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் சாலைகள், குளங்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மக்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய இதுவரை மத்திய மாநில அரசுகளிடம் இருந்து எந்த நிதியும் வழங்கபடவில்லை அதனால் தான் சாலைகள் குளங்கள் பராமரிக்கபடாமல் உள்ளன தெரிவித்தார்.

மேலும் ஊராட்சியில் செய்யபடவேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்த பல்வேறு தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News