அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற 16 கடத்தல் டாரஸ் லாரிகள் பறிமுதல்
குமரியில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற 16 கடத்தல் டாரஸ் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து பாறைகளை உடைத்து கருங்கல், ஜல்லி, மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களை சட்ட விரோதமாக தினமும் நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகள் மூலம் அதிக பாரத்துடன் கேரளாவிற்கு கடத்தி வருவதாக புகார்கள் எழுந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்தி செல்லும் டாறஸ் லாறிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சிறப்பு தாசில்தார் இக்னோஸியஸ் சேவியர் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் தக்கலை, வில்லுகுறி அழகியமண்டம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக அளவுக்கு அதிகமான பாரத்துடன் ஜல்லி ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற 16-டாறஸ் லாறிகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட் வாகனங்களை மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றி வந்தமைக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.