குமரியில் கனமழையால் ரப்பர் விவசாயம் பாதிப்பு: நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தவிப்பு
குமரியில் பெய்து வரும் கன மழையால் ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்து உள்ளது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழையானது சுமார் 16 மணி நேரத்தை கடந்து பெய்து வருகின்றது.
இதன்காரணமாக அணைகளில் இருந்து பெருமளவில் நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கீரிப்பாறை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள குமரி மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய விவசாயமான ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கனமழையின் காரணமாக ரப்பர் பால் வெட்ட முடியாத நிலையில் ரப்பர் பால் வெட்டும் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இதேபோன்று அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களுக்கு செல்லும் பாதைகளும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் ரப்பர் விவசாயம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.