கேரளாவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில்  மதம் பிடித்த யானைகள் மோதல்

கேரளாவில் கோவில் விழாவில் மதம் பிடித்த யானை மற்றொரு யானையை தந்தத்தால் குத்தி நிலையில் பக்தர்கள் பலர் காயம் அடைந்தனர். ;

Update: 2022-03-20 15:52 GMT

கேரளாவில் திருவிழாவில் மோதிக்கொண்ட யானைகள்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆறாட்டு புழா கோவிலில்  திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானைகளில் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்து மற்றொரு யானையை தந்தத்தால் குத்தி உள்ளது.

இதை பார்த்த மற்ற யானைகளும் மிரண்டு வேறு வேறு திசைகளில் ஓடியது, யானைகள் மிரண்டதை கண்டு திருவிழாவுக்காக கூடியிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதில் ஓட்டம் பிடித்த பலரும் கீழே விழுந்து படுகாயமும் அடைந்தனர். இதனை தொடர்ந்து  யானை பாகன்கள் சிறிது நேரம் போராடி யானையை அமைதிப்படுத்தினர்.

இதனால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்து. தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் யானைகளின் பிட்னஸ் சான்றிதழ்களை பரிசோதித்தனர்.

Similar News