குமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
குமரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,92,555 ஆக உள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்ட மன்ற தொகுதில் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 92 ஆயிரத்தி 555 ஆக உள்ளனர். இதில் ஆண்கள் 7 லட்சத்து 92 ஆயிரத்தி 410 பேர், பெண்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்தி 950 மற்றும் இதர வாக்காளர்கள் 195 என உள்ளனர். கடந்த வாக்காளர் பட்டியலை விட புதிய வாக்காளர்களாக 28 ஆயிரத்தி 462 பேர் சேர்க்கப்பட்டும், அதே போன்று 6 ஆயிரத்து 764 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.