தொடர் பண்டிகை எதிரொலி - கேரளாவில் சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு
தொடர் பண்டிகை எதிரொலியால் கேரளாவில் சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு.;
தமிழ் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் மலையாள புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது, மலையாள பஞ்சங்கப்படி இன்று மலையாள புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் இந்த நாளை கேரளா மக்கள் விஷு பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கேரளாவில் விஷு பண்டிகை இன்று கொண்டாடப்பட்ட நிலையில் கேரளாவில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. பொதுவாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பூக்கள் கொண்டு வரப்படும் நிலையில் 2 அடி கொண்ட ரோஜா ஆரம் 300 ரூபாய்க்கும், 2 அடி அரளி ஆரம் 250 ரூபாய்க்கும், ஒரு முலம் மல்லிகை பூ 100 ரூபாய்க்கும், ஒரு முலம் பிச்சிப்பூ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இதே போன்று தொடர் பண்டிகை காரணமாக தனி துளசி ஆரம், கிரேந்தி ஆரம் உள்ளிட்ட அனைத்து பூ வகைகளின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது, இதனிடையே விஷு பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கும் கனிக்கொற்றை பூவிற்கும் கேரளாவில் கடும் கிராக்கி நிலவி வருகிறது.