கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - 3 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்
குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகேஷ் தலைமையிலான போலீசார் காக்காவிளை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(21), விஷ்ணு(19), மற்றும் அஜ்மல்(21) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களை சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு அவர்கள் வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.