குமரி ரேஷன் கடை பாமாயிலில் துர்நாற்றம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமரியில் ரேஷன் கடை பாமாயிலில் துர்நாற்றம் வீசுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2022-01-31 02:30 GMT

குமரி ஆட்சியர் அலுவலகம் 

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே பாகோடு பி.ஏ.சி.வி நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது, 1065 குடும்ப அட்டைகளை கொண்ட இந்த ரேஷன்கடையில் வழங்கபட்டு வந்த பாமாயில் தரக்குறைவாக இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களாக புகார் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று வழங்கப்பட்ட பாமாயில் நிறம்மாறி துர்நாற்றம் வீசி உள்ளதாக தெரிகிறது. மேலும் சிலர் சமையலுக்காக எண்ணையை சூடுபடுத்தியபோது கறுப்பு நிறத்தில் மாறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கெட்டுபோன பாமாயிலுடன், சம்மந்தப்பட்ட  நியாய விலைக்கடை முன் குவிந்து ரேஷன்கடை ஊழியர்களிடம் புகார் அளித்தனர்.

இந்த அளவிற்கு துர்நாற்றம் வீசும் பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் உபதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பாமாயிலை பயன்படுத்த முடியாமல் தரையில் கொட்டிவருவதாகவும் குற்றம் சாட்டினர். இந்த ரேஷன்கடையில் ஆய்வு நடத்தி பாமாயில் எண்ணை எப்படி கெட்டுபோனது என கண்டுபிடிப்பதோடு வாங்கி சென்றவர்களுக்கு மாற்று தரமான பாமாயில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குமரி ஆட்சியருக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News