மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரளா - இயல்பு வாழ்க்கை முடங்கியது
மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.;
கடந்த வருடம் நவம்பர் மாதம் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், மலப்புறம் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
இதனிடையே திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, அதன்படி பிற்பகல் முதல் நெய்யாற்றின்கரை, பாலராமபுரம், அட்ட குளங்கரா, கிள்ளிப்பாலம், தம்பானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. மேகம் முழுவதுமாக கருத்து இருள் சூழ்ந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது.