கன்னியாகுமரி: கோணம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் அமைச்சர் ஆய்வு

கோணம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-28 15:30 GMT

கோணம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மகளிர் தொழில் பயிற்சி நிறுவனம் மற்றும் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் திறன் மேம்பாட்டு துறை மூலம் பயிற்சி அளிக்கப்படும் நிறுவனங்களில் நூற்றுக்கு 70 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தொழில் தொடங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று தமிழக அரசால் கட்டாயப்படுத்த முடியாது, மாநில அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News