குமரியில் கொரோனா பரவல் காரணமாக களையிழந்த கிருஷ்ண ஜெயந்தி விழா
கொரோனா பரவல் காரணமாக கன்னியாகுமரியில் எளிமையாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.;
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக கிருஷ்ண ஜெயந்தி விழா களையிழந்து காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்து வருவது, உரியடி எனப்படும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதோடு கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.
இந்நிலையில், இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கிருஷ்ண ஜெயந்தி விழா களையிழந்து காணப்பட்டாலும், அவரவர் வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு பால் கொழுக்கட்டை, வெண்ணை உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்தும் எளிமையாக கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.