காவலாளியிடம் இருந்து பணம் செல்போன் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

காவலாளியிடம் இருந்து பணம் செல்போன் கொள்ளை சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் விசாரணை.;

Update: 2021-06-12 09:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பல்க் செயல்பட்டு வருகிறது. இந்த பல்க்கில் இன்று அதிகாலை ஒரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் மற்றும் முகக்கவசங்கள் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் யாருக்கும் தெரியமல் பெட்ரோல் நிரப்ப வந்த 3 பேர் இயந்திரம் லாக் செய்யபட்டு இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே வாலிபரில் ஒருவர் அங்கு தூங்கி கொண்டிருக்கும் ஊழியரின் அருகில் சென்று அவரது செல்போன் மற்றும் அவரிடம் இருந்த 1000 ருபாய் பணத்தையும் திருடிவிட்டு தப்பி ஓட முயன்றார். அதனை கண்ட அந்த ஊழியர் உடனே எழும்பி அந்த வாலிபர்களை பிடிக்க முயலுகையில் அந்த வாலிபர்கள் மூன்று பேரும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி செல்கின்றனர். இது குறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொல்லங்கோடு போலீசார் பெட்ரோல் பல்க் ஊழியரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News